என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சாரிடான் மாத்திரை
நீங்கள் தேடியது "சாரிடான் மாத்திரை"
சாரிடான் மாத்திரை உள்பட 328 வகையான மருந்து தயாரிப்பில் மேற்படி மோசடிகள் நடைபெறுவது மீண்டும் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. #Saridon #CombinationDrugs #Banned #Govenment
புதுடெல்லி:
2 அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை குறிப்பிட்ட விகிதத்தில் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்துகள் எப்.டி.சி. மருந்துகள் என அழைக்கப்படுகிறது. இந்த மருந்துகளை இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் சோதனை செய்தது. அப்போது 344 வகையான மருந்துகள் குறிப்பிட்ட விகித சேர்க்கை இன்றியும், அலட்சியமாகவும் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த மருந்துகளால் உடல் நலத்துக்கு கேடு என்பதால் கடந்த 2015-ம் ஆண்டு அவை தடை செய்யப்பட்டன. இதை எதிர்த்து சில மருந்து நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த மருந்துகளின் தயாரிப்பு குறித்து மீண்டும் ஆய்வு செய்யுமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.
அதன்படி இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் சிறப்பு வல்லுனர் குழு மீண்டும் இந்த மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் 328 வகையான மருந்து தயாரிப்பில் மேற்படி மோசடிகள் நடைபெறுவது மீண்டும் உறுதி செய்யப்பட்டது. எனவே அந்த மருந்துகளை தடை செய்யுமாறு நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இதைத்தொடர்ந்து அந்த மருந்துகளை தயாரித்தல், விற்பனை மற்றும் வினியோகத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த மருந்துகள் பெரும்பாலும் வலி நிவாரணிகள், நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் கிருமி நாசினிகள் ஆகும். இதில் பிரபல தலைவலி மாத்திரையான சாரிடானும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை தவிர மேலும் 6 எப்.டி.சி. மருந்துகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. #Saridon #CombinationDrugs #Banned #Govenment

×

X